தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் பி.எல்.தேனப்பன். தனது ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் மூலமாக 'காதலா காதலா', 'பம்மல் கே.சம்பந்தம்', 'பஞ்சதந்திரம்', 'கனா கண்டேன்', 'துரை', 'அய்யனார்' உள்பட பல படங்களைத் தயாரித்துள்ளார்.
தற்போது ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் 'பேரன்பு' படத்தை தயாரித்து வருகிறார். சமீபகாலமாக படங்களில் நடித்தும் வருகிறார். 'குரங்கு பொம்மை', 'பலூன்', 'ஸ்கெட்ச்', 'மதுரவீரன்' ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை கதீட்ரல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கார் ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.
அவரை தடுத்து நிறுத்தி காவல்துறை சோதனை செய்ததில் அவர் மது போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவருக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
PL Thenappan is a prominent producer of Tamil cinema. He plays villain roles in 'kurangu bommai' movie. Last night, PL Dinappan was driving the car. Police found he was drunk and drive. Police filed a case and fined him Rs 2500.