ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷின் அடுத்த படம் என்ன?- வீடியோ

2018-03-16 3,343

நடிகர் தனுஷ் 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
தனுஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு 'நான் ருத்ரன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறதாம். நடிகரான தனுஷ், 'பவர் பாண்டி' மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் தாண்டி இயக்குநர் எனும் இடத்தையும் பிடித்ததால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. இந்நிலையில், நிறைய படங்களைத் தயாரித்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ் பணப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது எனும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி அரசியல் பிரவேசம் ஆரம்பித்ததும், அவரது குடும்பத்தினர் தலையீடு என்பது சுத்தமாக இல்லாமல்தான் இருந்தது. இப்போதும்கூட அப்படித்தான் என்று நம்புகிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை அசைக்கும் விதமாக நேற்று சில போஸ்டர்கள், ட்வீட்டுகள், பேஸ்புக் பதிவுகள் வந்துள்ளன. இது ரஜினியை அவரது நேர்மைக்காக மட்டுமே நேசிக்கும் பலரையும் சங்கடப்படுத்தியுள்ளது.ரஜினி தும்மினாலே அதற்கு பலவித அர்த்தங்கள் மீம்களாக உலா வரும் நேரம் இது. இந்த நேரத்தில் சௌந்தர்யாவின் அரசியல் பிரவேச அறிவிப்பு, தனுஷின் வாரிசு அறிவிப்பெல்லாம்... தெரிஞ்சுதான் செய்றாங்களா...? இதுக்கெல்லாம் குறைஞ்சபட்சம் மறுப்பாவது ரஜினி தரப்பில் இல்லாவிட்டாலும், சௌந்தர்யா, தனுஷ் தரப்பிலாவது வரவேண்டாமா? என அங்கலாய்க்கிறார்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்ற உண்மையான ரசிகர்கள்.


Actor Dhanush made his directorial debut with 'Pa.Pandi'. Dhanush's next film as a director have been named 'Naan Rudhran'. Dhanush's Wunderbar Films is going to produce this film. Some of the fans have announced that Soundarya and Dhanush would be entered politics as Rajinikanth's heirs.

Videos similaires