கள்ளக்குறிச்சி அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் 8 மாத குழந்தையும் மனைவியையும் உயிரோடு எரித்துக்கொன்றுவிட்டு நாடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியை சேர்ந்தவர் சரவணன். 35 வயதான இவர் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். இவருக்கு கனகா என்ற மனைவியும் கார்த்திகா என்ற 7 வயது மகளும், சிவசந்திரன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். சரவணன் மாற்றுத்திறனாளி என்பதால் வேலைக்கு எங்கும் செல்லவில்லை. அவரது தந்தை பால்ராஜ், தாய் விஜயா ஆகியோர் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள்.