நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் செயின்களை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்வதால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருத்தனி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சங்கீதாவின் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலியை இருசக்கரத்தில் வந்த ஹல்மெட் கொள்ளையர்கள் அறுத்து சென்றனர். இதேபோல் அதேபகுதியை சேர்ந்த ரோஜா என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த செயினையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து கொள்ளையர்கள் தினமும் செயின்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பெண்களிடம் கொள்ளையடிக்கும் ஹல்மெட் கொள்ளையர்களால் அப்பகுதி பெண்களும் பொதுமக்களும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
DES : The public is scared by the looting of robbers who are walking on the neck of the women walking on the neck.