பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடிகை கவுதமி குமுறல்- வீடியோ

2018-03-14 1

மகளீருக்கு எதிரான பல்வேறு வன்முறைகள் நடக்கிறது என்று நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்

வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழாவில் திரைப்பட நடிகை கௌதமி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு சான்றுகளையும்பரிசுகளையும் வழங்கினார் பின்னர் விழாவில் பேசிய நடிகை கௌதமி மகளீர் வாழ்வில் முன்னேற்றம் காண பல்வேறு தடைகள் இடையூறுகள் போன்ற சவால்களை கடந்தால் தான் வெற்றிப்பாதையில் பயணிக்க முடியும் என்று கூறினார்

மேலும் மகளீருக்கு எதிரான பல்வேறு வன்முறைகள் நடக்கிறது என்றும் இவற்றிற்கெல்லாம் காரணம் நாம் பெண் குழந்தைகளை சுய சிந்தனை இல்லாமல் வளர்ப்பது என்றும் அவர்களாகவே எதுநன்மை எது தீமை என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களை வழிநடத்தினால் இது போன்று பெண்களுக்கு எதிரான செயல்களை தடுக்கலாம் என்றும் கவுதமி தெரிவித்தார்

DES : Actress Gauthami has said that there are various violent acts against women

Videos similaires