பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர் ! தட்டி கேட்டதால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்- வீடியோ

2018-03-14 1

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தை தட்டி கேட்டதால் பனி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்த வங்கி பயிற்சி இயக்குனர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூரில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் கிழ் இயங்கி வரும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் லூசியா நான்சி என்பவர் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு பயிற்சி எடுத்த மாணவிகள் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கருணாகரன் தங்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக அழுது புலம்பியுள்ளனர் இதனால் நான்சி கருணாகரனை எச்சரித்துள்ளார் அப்போது இயக்குனர் கருணாகரன் இனியும் லூசியா நான்சி பணிபுரிந்தால் தனக்கு ஆபத்து வரும் என கருதி லூசியா நான்சியை எந்த காரணமும் இன்றி பணியில் இருந்து நீக்கியுளார்

இதனையடுத்து இயக்குனர் கருணாகரன் மீது தன் பெற்றோர் கணவருடன் வந்து லூசியா நான்சி விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவல் நிலையம் வரவழைக்கப்பட்ட கருணாகரன் செய்தியாளர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார்.

Videos similaires