சென்னை, பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் இண்டிகோ நிறுவனத்தின் 47 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விமான சேவை ஒழுங்குமுறை இயக்குநரகம் உத்தரவையடுத்து இந்த விமானங்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறைந்த கட்டண விமான சேவை அளித்து வரும் விமான நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது இண்டிகோ.
இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து, உத்தரபிரதேசத்தின் லக்னோ நகருக்கு பயணித்தது. ஆனால் புறப்பட்ட 40 நிமிடங்களில் அந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
IndiGo has cancelled as many as 47 flights on Tuesday after the DGCA grounded its eight A320Neo planes with faulty Pratt amp Whitney engines.