சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடுகிறாரா முதல்வர் துரைமுருகன் கேள்வி

2018-03-13 6

தமிழக முதல்வர் காவிரி விவகாரத்தில் மேற்கொண்டுள்ள முடிவை பார்க்கும்போது அவர் சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடுகிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது ரோஷமில்லாதவர் என துரைமுருகன் குற்றம்சாடியுள்ளார்

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் திமுக செயல் வீரர்கள் கூட்டதில் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைதலைவரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் பேசினார் அப்போது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தற்போது சொல்லுவதை எல்லாம் புரிந்துகொள்கிறார் எதை செய்ய வேண்டும் வேண்டாம் என்பதை சைகை மூலம் கூறுகிறார் இன்னும் மூன்று மாதகாலத்தில் கலைஞர் நன்றாக பேசுவார்ன் என்று தெரிவித்தார்

மேலும் காவிரி பிரச்சணையில் தமிழகத்தில் சர்வக கட்சி கூட்டத்தை கூட்டி தலைவர்கள் பிரதமரை சந்திக்க இருந்தோம் ஆனால் முதல்வர் கேட்டும் பிரதமர் சந்திக்க மறுத்து நீர்வளத்துறை அமைச்சர் சந்திக்க கூறினார் இதன் மூலம் தமிழக முதல்வரை மோடி மதிக்கவில்லை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழக எம்பிக்கள் ராஜனாமா செய்ய வலியுறுத்தினோம் ஆனால் தமிழக முதல்வரோ அதிமுக எம்பிக்களை ராஜனாமா செய்ய சொன்னால் என்னை ஒழித்துவிடுவார்கள் என்று கூறினார் ஆந்திர முதல்வர் சாப்பாட்டில் உப்பை சேர்த்து சாப்பிடுவதால் தான் மத்திய அரசில் அங்கம் வகித்தும் ராஜனாமா செய்துவிட்டு வெளியில் வந்துவிட்டார் ஆனால் நமது முதல்வர் சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடுகிறாரா என்று தெரியவில்லை என்று பேசினார்

Videos similaires