மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு யார் காரணம். இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தாமல் இருந்தது யாருடைய தவறு, அரசு இந்த விஷயத்தில் செய்யத் தவறியது என்ன? மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் வெப்ப மண்டல மலைக்காடுகள், எனவே இங்கு இயற்கையான காட்டுத்தீக்கு வழியில்லை. மூங்கில் காடுகள், பைன் மரங்கள் உள்ளிட்ட சில மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது இயற்கையாக காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் மாற்றங்களால் இந்தப் பகுதிகளிலும் சூழல் மாறி வருகிறது. எப்போதும் இங்கிருக்கும் புல்வெளிகள் ஈரம் படர்ந்து இருக்கும் நிலையில், 2017-18ல் காடுகள் வறண்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.