தேனியில் நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கும் மலைத்தொடர் பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஒருவாரமாக அங்கு காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது. தற்போது குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது.
இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர். இந்தவிபத்தில் இது வரை 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.