தீ விபத்தில் சிக்கியோரை மீட்க டீ எஸ்டேட் தொழிலாளர்களும் முயற்சித்தனர். இதுவரை 8 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்தில் சிக்கிய 27 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். டோலி மூலம் 27 பேரும் மலையில் இருந்து கீழே கொண்டுவரப்பட்டனர்.
குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம் என்று கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.