டெல்லியில் செல்பி எடுப்பதற்காக துப்பாக்கி வைத்து விளையாடிய பிரசாந்த் சௌகான் என்ற இளைஞர், தவறுதலாக தன்னை தானே சுட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த இளைஞருக்கு அருகில் இருந்த சிறுவன் ஒருவருக்கும் அடிபட்டு இருக்கிறது. அந்த சிறுவனின் தந்தை பிரமோத் சௌகான் பாதுகாப்பிற்காக லைசென்ஸுடன் வாங்கி வைத்து இருக்கும் துப்பாக்கி ஆகும் இது. மரணமடைந்த பிரசாந்த் உத்தர பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.