திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரின் காலில் விழுந்து வணங்கினார் அந்த மாநிலத்தில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிப்லாப் தேவ். திரிபுராவில் 25 ஆண்டுகால இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடந்த வாரம் நடைபெற்ற சட்டசபை தேர்தல் மூலம் விடை கொடுத்தனர். அந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து பாஜக சார்பில் பிப்லாப் தேவ் முதல்வராக பதவியேற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த மாநில ஆளுநரிடம் அவர் ஆட்சி அமைக்கவும் உரிமை கோரினார்.
It was a touching gesture as Tripura Chief Minister Biplab Deb touched the feet of Manik Sarkar at the swearing-in ceremony.