இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள மாநில கட்சி எது தெரியுமா ?

2018-03-09 4

மாநிலக்கட்சிகள் வெளியிட்டுள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக சொத்துகள் இருப்பதாக ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு அடுத்தபடியாக திமுகவிற்கு அதிக சொத்துகள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ரூ. 634.96 கோடி சொத்து இருப்பதாக 2015-16 நிதியாண்டில் கூறியுள்ளது.

இதன்படி நாட்டில் உள்ள 20 மாநில கட்சிகளில் முதல் இடத்தை சமாஜ்வாதி கட்சி பிடித்துள்ளது, இரண்டாவது இடத்தில் ரூ. 257.18 கோடி சொத்துகளுடன் திமுகவும், அதனைத் தொடர்ந்து ரூ. 224.84 கோடி சொத்துடன் அதிமுக அடுத்த இடத்திலும் இருக்கிறது.

ADR report : Samajwadi Party declared assets worth Rs 634.96 crore in the financial year 2015-16 topping the chart among 20 regional parties followed by Rs 257.18 crore of DMK

Videos similaires