தமிழகத்தில் தான் பெண்கள் அதிக அளவில் தற்கொலைகள் செய்து கொள்வதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
வேலூரில் மகளிர்தினவிழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் தமிழகத்தில் தான் பெண்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிவதாக கூறினார். பெண்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர் வரதட்சனை, மாமியார் மாமனார் கொடுமை கணவன் மனைவிக்கு துரோகம் செய்வதாலும் தவறான வழியில் செல்வதாலும் பெண்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். பெண்கள் தற்கொலை செய்வதை தவிர்த்து துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று நிலோபர் கபில் தெரிவித்தார். அமைச்சரே தமிழகத்தில் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.