தந்தை பெரியாருக்கும் எச். ராஜாவிற்கும் சொத்து தகறாறு இருப்பதால் பெரியாரின் சிலை குறித்து அவர் பேசியதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி துணைதலைவர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தந்தை பெரியார் சிலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறிய கருத்துக்கு அதிமுகவின் ஒரு அமைச்சர் மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் பெரியாருக்கும் எச் ராஜாவிற்கும் இடையே சொத்து பிரச்சணை இருப்பது போல் பெரியார் குறித்து அவர் பேசியுள்ளதாக தெரிவித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என்றும் தீர்ப்புக்கு பின்னர் அதிமுக அரசு கவிழ்ந்து விடும் என்று துரைமுருகன் கூறினார்.
DES : Father to Periyar and H. Durai Murugan said that he was speaking about the statue of Periyar because the king is also a property of the property.