சென்னையில் மாணவி அஸ்வினி, அழகேசன் என்பவரால், கொலை செய்யப்பட்ட இடத்தின் சுற்றுவட்டாரத்தில் அவரின் ரத்தம் வழிந்தோடியுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற அதே கல்லூரியில், பிகாம் முதலாமாண்டு படித்த மாணவியை மதுரவாயலை சேர்ந்த அழகேசன் என்பவர் கல்லூரிக்கு அருகே கத்தியால் குத்தியும், கழுத்தையறுத்தும் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதலால் இக்கொலை நடந்துள்ளது. அஸ்வினி மதுரவாயலை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, காவல்துறையில் புகார் அளித்து சிறையில் தள்ளினார்.