மேலூர் அருகே ப்ளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் மாணவரின் விரல்கள் துண்டானது. அண்மைக் காலமாக கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் வெறித்தனமான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களிடையே பரவி வரும் கத்தி கலாச்சாரம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மேலூர் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் மாயக்காளை- தீபா தம்பதி. இவர்களின் மகன் அர்ஜுன்.