எப்படி இருந்த ஹன்சிகா இப்படி ஆயிட்டாங்களே!- வீடியோ

2018-03-09 1

ஹன்சிகா எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2011ம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானார் ஹன்சிகா. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு தற்போது மார்க்கெட் டல்லாக உள்ளது.
முன்பு போன்று கை நிறைய படங்கள் இல்லை.

ஹன்சிகா என்றாலே அவர் கொழுக் மொழுக் என்று இருந்தது தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். அவருக்கு அது தான் அழகும் கூட என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஹன்சிகா திடீர் என்று தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து கஷ்டப்பட்டு குறைத்தும் விட்டார். ஆனால் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஹன்சிகா கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒல்லியாக உள்ள நயன்தாரா கொழுக் மொழுக்கென்று ஆக முடிவு செய்துள்ளார். அவரை போன்று ஹன்சிகாவும் பழைய ஃபார்முக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Fans are shocked to see the latest picture of their favourite actress Hansika. Hansika is seen so thin in that photo. Fans love to see her back in bubbly look.

Videos similaires