ரஜினி அரசியலில் வரத்திற்கு காரணம் யார்?- வீடியோ

2018-03-09 5,546

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க இயக்குனர் பா. ரஞ்சித் தான் காரணம் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவை வைத்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திற்கு நோட்டா என்று பெயர் வைத்துள்ளனர். படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஞானவேல்ராஜா கூறியதாவது, ரஜினி சார் 2 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வருவார் என்று நினைத்தேன். ரஞ்சித்தின் கபாலி படத்தில் நடித்த பிறகு அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன் நடக்கவில்லை. மீண்டும் ரஞ்சித்துடன் சேர்ந்து காலா படத்தில் நடித்து முடித்த பிறகு ரஜினி சார் அரசியலுக்கு வந்துள்ளார். இதுவே ரஞ்சித்தின் பலம். தன்னுடன் பழகுபவர்களுக்கு அரசியலின் முக்கியத்துவத்தை எளிதில் உணர்த்துவார் ரஞ்சித். ரஜினி சார் அரசியலுக்கு வந்துள்ளதில் ரஞ்சித்துக்கு முக்கிய பங்கு உள்ளது. தான் வாழும் சமூகம் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார் ரஞ்சித். இருமகன் டீஸரை பார்த்தபோதே ஆனந்த் ஷங்கருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

Rajinikanth has decided to enter politics because of director Pa. Ranjith, said Producer Gnanavel Raja at NOTA press meet. Rajini who kept on postponing his political entry has finally taken a call.