எச் ராஜா காட்டு மிராண்டி! டிடிவி தினகரன் ஆவேச பேட்டி- வீடியோ

2018-03-08 1

பெரியார் சிலை விவகாரத்தில் மத்திய அரசின் துணையுடன் தான் எச் ராஜா காட்டு மிராண்டி தனமாக செயல்படுகிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
தேனியில் ஆர் கே நகர் எம் எல் ஏ தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 18 எம் எல் ஏக்கள் மீதுள்ள வழக்கு விசாரணை முடிந்த பின்னர் கட்சிபெயர் அறிவிக்கப்படும் என்றார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இரண்டுமுகங்கள் உண்டு என்றும் ஒன்று சாந்தமானமுகம், மற்றொன்று கொடூரமுகம் என்றதுடன் தற்போது கொடூரமுகம் தான் வெளியே தெரிகிறது டிடிவி தினகரன் கூறினர். நான் வருவதை கண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு ருத்ரதாண்டவம் ஆடுவதை பார்த்திருப்பீர்கள் என்றதுடன் இதனால் இனி மூன்று மாதத்திற்கு ஒருமுறை தேனிக்கு வந்து ஒருவாரம் தங்குவேன் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்னை என்ன செய்வார்கள் என்று சவால் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் பெரியார் சிலை விவகாரத்தில் எச் ராஜா படித்தவர் போலபேசாமல் காட்டுமிரான்டி தனமாக கண்டபடி பேசுகிறார் என்றும் மத்திய அரசின் துணையுடன் தான் எச் ராஜா ஆட்டம் போடுகிறார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்



des : ttvDinakaran said that H Raja's Mirandi is working with the Central Government in Periyar statue

Videos similaires