பார்த்திபனின் மகள் கீர்த்தனா தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டார். நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஷயை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டனர். கீர்த்தனா, அக்ஷய் அக்கினேனியின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது. நிச்சயதார்த்தத்தில் கீர்த்தனாவின் தாய் சீதாவும் கலந்து கொண்டார். மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி அரசியலில் பிசியாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். யார் திருமணத்திற்கு சென்றாலும் வித்தியாசமான பரிசு கொடுப்பதற்கு பெயர் போன பார்த்திபன் தனது மகளின் திருமண பத்திரிகையை தானே டிசைன் செய்தார். கன்னத்தில் முத்தமிட்டால் பட அமுதா குட்டி அதற்குள் வளர்ந்து திருமணமும் செய்து கொண்டது. நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும்மா என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கீர்த்தனா, அக்ஷயை ஆசிர்வாதம் செய்தார்.
Actor cum director Parthiban's younger daughter Keerthana has married her boyfriend Akshay at a grand ceremony held in Chennai on international women's day.