'காலா' படத்தில் நடித்திருக்கும் நாய்க்கு செம மவுசு! 2 கோடி மார்க்கெட்!- வீடியோ

2018-03-07 3

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் 'காலா'.
மும்பை டானாக வரும் ரஜினிகாந்த்தின் கூடவே ஒரு நாய் வலம் வருகிறது. இது தெருவில் வளரும் நாட்டு நாய் வகையைச்சேர்ந்தது தான்.
இந்த நாயைப் பற்றிய தகவல்களை அதன் பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
'காலா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே கவனிக்கப்பட்ட முக்கியமான விஷயம். அதில் ரஜினிக்கு அருகே இருக்கும் நாய். அந்த நாயும் 'காலா' படத்தில் முக்கியமான பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறது.

இந்த நாய்க்கு மணி என பெயர் வைத்திருக்கிறார்களாம். இதை சென்னையின் புறநகர்ப் பகுதித் தெருவில் கண்டெடுத்து இந்த படத்தில் நடிக்க ட்ரெய்னிங் கொடுத்துள்ளார் பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர்.
ரஞ்சித், இப்படத்திற்காக நிறைய நாய்களை அழைத்து வரச் சொல்லி எதிலும் திருப்தி ஆகவில்லையாம். கிட்டத்தட்ட 30 நாய்கள் ஆடிஷனில் அவுட் ஆகியிருக்கின்றன. கடைசியாக இந்த நாய் தான் சூப்பர்ஸ்டாருடன் நடிக்க ஓகே ஆகியிருக்கிறது.
ரஜினியிடம் இந்த நாயைக் காட்டியதும், இவன் பண்ணிடுவானா எனக் கேட்டாராம். பண்ணிடுவான் எனச் சொன்னதும் ஓகே சொல்லிட்டாராம். ரஜினிக்கு இந்த நாயை மிகவும் பிடிக்கும் என பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.



'Kaala' dog became famous now. This dog's trainer Simon shared about 'kaala' shoot.