சர்ச்சை கிளப்பும் ஸ்ரீதேவியின் மகள்!- வீடியோ

2018-03-07 4

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது 21வது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நேற்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடினார். அம்மா செல்லமான அவர் முதல் முறையாக தாயில்லாமல் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஜான்வி தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அங்கிருந்த முதியவர்கள் ஜான்விக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். போனி கபூரின் முதல் மனைவியின் பிள்ளைகளான நடிகர் அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் ஆகியோர் தங்கைகளான ஜான்வி, குஷிக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் உள்ளனர். அம்மாவை பார்த்து எப்படி பெருமைப்பட்டேனோ அதே போன்று அவர் என்னை பார்த்து பெருமைப்படும்படி நடந்து கொள்வேன் என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.


Jhanvi Kapoor has celebrated her 21st birthday on tuesday at an old age home in Mumbai. Video of her birthday celebration with old people has gone viral on social media.

Videos similaires