என்னது பிரான்சிஸ் மெக்டார்மன்டின் ஆஸ்கர் சிலையை காணுமா?- வீடியோ

2018-03-07 531

நடிகை பிரான்சிஸ் மெக்டார்மன்டின் ஆஸ்கர் விருதை திருடு போனதால் பரபரப்பு ஏற்பட்டது. 90வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறந்த நடிகைக்கான விருது த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி படத்திற்காக பிரான்சிஸ் மெக்டார்மன்டுக்கு கிடைத்தது(60). இந்நிலையில் பிரான்சிஸ் பதறித் துடித்து அழுத சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்காக பார்ட்டி கொடுக்கப்பட்டது. பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த பார்ட்டிக்கு பிரான்சிஸ் தனது கணவரான இயக்குனர் ஜோயல் கோயனுடன் சென்றுள்ளார். டெர்ரி பிரையன்ட் (47) என்பவர் பார்ட்டிக்கு வந்த இடத்தில் பிரான்சிஸின் விருதை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து விருதை வாங்கி பிரான்சிஸிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஆஸ்கர் விருதை திருடிய டெர்ரி பிரையன்ட் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Los Angeles police arrested a 47-year-old man named Terry Bryant for stealing Frances McDormand's Oscar statuette. He was later released on bail.

Videos similaires