ரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவர் மனைவி ஹசின் ஜகான் குற்றம்சாட்டியுள்ளார். ஷமி பல பெண்களுடன் 'சாட்' செய்த விவரங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், ஹசின் ஜகான்.
முதலில் இதை பார்த்த பலரும் ஹசின் ஜகான் பேஸ்புக்கை யாரோ ஹேக் செய்து இதுபோல விஷம பிரச்சாரம் செய்திருக்க கூடும் என்றுதான் நினைத்தனர். ஆனால் ஹசின் ஜகான், செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது உண்மை என குறிப்பிட்டு, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
Hasin Jahan, wife of Indian cricketer Mohammed Shami, accused her husband of assault and having extramarital affairs.