பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்படும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, இதுபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார். எச் ராஜாவின் இந்த பதிவு தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எச் ராஜாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.