ஆபாச படங்களுக்கு அடிமையான மகன்...கையை வெட்டிய தந்தை!- வீடியோ

2018-03-06 16

தெலுங்கானாவில் தன்னுடைய மகன் ஆபாசப் படங்களுக்கு அடிமையானதை கண்டித்து பார்த்த தந்தை ஆத்திரத்தில் மகனின் கையை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் : தெலுங்கானாவின் பஹடி ஷெரீப் பகுதியில் தனது மகன் ஆபாச படங்களுக்கு அடிமையானதை தொடர்ந்து கண்டித்து வந்த தந்தை, அப்போதும் மகன் திருந்தாததால் கசாப்பு கடை கத்தியை வைத்து அவனின் கையை வெட்டி துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் பஹடி ஷெரீப் பகுதியைச் சேர்ந்த 45 வயது முகமது குய்யம் குரேஷி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய 19 வயது மகனின் வலது கையை வெட்டியதால் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.

குரேஷி தன்னுடைய மகன் காலித்தின் கையை வெட்டுவதற்கான காரணம் என்ன தெரியுமா. 19 வயதே முன காலித் தன்னுடைய செல்போனில் எப்போது போர்ன் வீடியோக்களை பார்த்துக் கொண்டே இருப்பாராம்.

Videos similaires