விஜய்யின் தூக்கத்தை கெடுக்கப் போகிறார் வரலட்சுமி சரத்குமார்.
நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் வரலட்சுமி சரத்குமார் அடம்பிடிப்பதே இல்லை. படப்பிடிப்புக்கு வந்தால் பந்தாவும் செய்வது இல்லை.
இந்த காரணங்களால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் விரும்பும் நடிகையாக உள்ளார் வரலட்சுமி.வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தாலும் சிரித்தபடியே சம்மதம் சொல்கிறார் வரலட்சுமி. விஷாலின் சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமிக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர். விஜய் 62 படக்குழுவோ முக்கிய அறிவிப்பு வெளியிட்டு வரலட்சுமிக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளது
Varalakshmi Sarathkumar has bagged a meaty role in Vijay's upcoming movie Vijay 62 being directed by AR Murugadoss. Varalakshmi's character is reportedly having negative shade.