யானை தாக்கி வன அதிகாரி பலி- வீடியோ

2018-03-05 376

யானை தாக்கி பலியான வன அதிகாரி உடல் அவரது சொந்த ஊரான கம்பத்திற்கு கொண்டுவரப்பட்டு 24 குண்டுகள் முழுங்க உடல் தகனம் செய்யப்பட்டது

தேனி மாவட்டம் கம்பம் கொண்டித்தொழு தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா இவரது மகன் மணிகண்டன் கர்நாடகா மாநிலத்தில் ராஜீவ்காந்தி புலிகள் காப்பகத்தில் கள இயக்குனராகும், மண்டல வன பாது காப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். நேற்று காலை மைசூர் மாவட்டம் டிபி குப்பி வனச்சரகப்பகுதி கபினி அணைக்கு பின்புறம் உள்ள புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத் தீ குறித்த பாதிப்புகள் அறிவதற்காக அதிகாலையில் சம்பவ இடத்திற்கு களப்பணியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தனர் அப்போது மணிகண்டன் ஜி.பி.எஸ் வாசிப்பைப் கேட்டு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் புதரில் மறைந்து நின்ற ஒற்றை யானை அவரை கடுமையாக தாக்கியதில் தூக்கி எறியப்பட்ட மணிகண்டனை படுகாயத்துடன் உடன் சென்ற சக வன ஊழியர்கள் மீட்டு மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்

பின்னர் காவல் துறையினர் சார்பாக 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்ட பிறகு அங்கு காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

Free Traffic Exchange

Videos similaires