மணிரத்னம் பற்றிய யாருக்கும் தெரியாத ரகசியம் சொன்ன சுஹாசினி!- வீடியோ

2018-03-05 3


இந்திய சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். அவரது மேக்கிங் ஸ்டைலுக்கெனவே ரசிகர் பட்டாளம் உண்டு.

ஹீரோக்களுக்காக படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் இயக்குநருக்கான படம் பார்க்கும் ரசிகர்கள் இருப்பது மணிரத்னத்துக்குதான்.

'அபியும் அனுவும்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், மணிரத்னம் பற்றிய பரவலாகத் தெரியாத ரகசியத்தைக் கூறியுள்ளார் சுஹாசினி.

1983-ல் 'பல்லவி அனு பல்லவி' என்ற கன்னட படத்தில் இயக்குனராக அறிமுகமான மணிரத்னம் 1985-ல் 'பகல்' நிலவு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து இதயகோயில், மெளனராகம், நாயகன், அஞ்சலி என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை எடுத்து முன்னணி இயக்குனரானார்.
மணிரத்னம் கடைசியாக இயக்கிய 'காற்று வெளியிடை' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது செக்கச்சிவந்த வானம் என்ற மல்டி ஹீரோ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் மணிரத்னத்தின் 38-வது படமாகும்.


Suhasini maniratnam reveals the secret about director Maniratnam. Maniratnam worked assistant director of Kannada director P.R.Ravindran.