ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் '2.O' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் எப்போதோ நிறைவடைந்துவிட்டன. '2.ஓ' படத்தின் VFX பணிகளால் படம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால், இதற்கு முன்பே 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் '2.ஓ' படத்தின் VFX மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் நேற்று இரவு வெளியிட்டார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் எமி ஜாக்ஸன் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது. இதனால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் '2.0' படத்தின் கிராஃபிக்ஸ் மேக்கிங் வீடியோவை இயக்குனர் ஷங்கர் நேற்று இரவு வெளியிட்டுள்ளார். '2.ஓ' டீசர் திருட்டுத்தனமாக வெளியானதால் முன் அறிவிப்பின்றி இந்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டுளார். நேற்று வெளியாகியிருக்கும் VFX மேக்கிங் வீடியோவின் மூலம் படக்குழுவின் பிரமாண்டமான உழைப்பு தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் #2pointO #ChittiIsBack எனும் ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Director Shankar released '2.O' VFX making video on twitter.