நடு இரவில் வீட்டுக்குள் புகுந்த ராட்சத முதலை

2018-03-03 1,311

நடு இரவில் வீட்டுக்குள் முதலை புகுந்ததில் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடியதால் பரப்பரப்பு .

சிதம்பரம் வக்காரமாரி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டிற்குள் இரவு நேரத்தில் ராட்சத முதலை ஒன்று நுழைந்துள்ளது. முதலையை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் அலறல் சத்தத்தைக் கேட்ட முதலை ஓடிச் செ ன்று அருகில் உள்ள மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்து கொண்டது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் சுமார் 30 நிமிடம் போராடி முதலையை உயிருடன் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட முதலையை வனத்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்று அருகில் உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர். முதலை வீட்டிற்குள் புகுந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

In the middle of the night, the house broke into the crocodile when the villagers chattered.

Videos similaires