தனுஷின் 'வட சென்னை' : ஃபர்ஸ்ட் லுக்!

2018-03-03 3,040

தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வட சென்னை', 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதில் முதல் இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. வெற்றிமாறன் இயக்கிவரும் 'வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 8-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார். தற்போது நடந்துவரும் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை முடித்து படத்தை ரம்ஜான் விடுமுறைக்காக ஜூன் 14 அன்று வெளியிட தனுஷ் முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் வியாழக்கிழமை (மார்ச் 8) ரிலீஸாகும் என அறிவித்துள்ளார் தனுஷ். 'வடசென்னை' படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வடசென்னை படம் சென்னையில் மீனவர்கள், மற்றும் அந்த சுற்றுச் வட்டார மக்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல் தான் கதை என தெரியவந்துள்ளது.


Dhanush's 'Vada chennai' first look will be released on March 8.