துச்சேரியில் கடற்கரையில் நடைபெறும் தனி தமிழ் இயக்கம் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து வருகின்றது,காவிரி தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு ஒருதலை பட்சமான தீர்ப்பு என்று தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் அனைத்துகட்சி கசப்பின்மையற்று ஒரே கோரிக்கை வலியுறுத்துவதாக அமைந்தது என்று கூறினார். தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திரமோடி கர்நாடக மாநில தேர்தலை நினைவில் வைத்து காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று கூறிய அவர் காவிரி மேலாண்மை விவகாரத்தில் 8 கோடி தமிழக மக்களின் ஒரே கோரிக்கையை கேட்க முடியாதவர் பிரதமர் பதவிக்கே தகுதியற்றவர் என கடுமையாக விமர்சனம் செய்தார்.