'விக்ரம் வேதா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கதிருக்கு, நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. ஈரோட்டை சேர்ந்தவர் கதிர். மதயானை கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு கிருமி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் வாசுதேவன், ஜெயந்தி தம்பதிகளின் மகள் சஞ்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ‘மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கதிர். தொடர்ந்து ‘கிருமி', ‘என்னோடு விளையாடு', ‘விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘சத்ரு', ‘பரியேறும் பெருமாள்', ‘சிகை' ஆகிய படங்களில் நடித்துள்ளார்."இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்களாக பார்த்து நிச்சயித்த திருமணம். மணப்பென் உறவுக்காரரும் அல்ல. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது" எனக் கூறியிருக்கிறார் கதிர்.
'Madhayaanai koottam' kathir to get married tomorrow.