பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா. இவர் சினிமா படங்களின் தயாரிப்புகளுக்கு மட்டுமல்லாது வெளியில் நிறைய பேருக்கும் வட்டிக்கு கடன் கொடுத்து வரும் தொழில் செய்கிறார். பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா காணாமல் போயிருக்கிறார். தனது மகள் கரிஷ்மா போத்ரா கடத்தப்பட்டதாக தி.நகர் துணை ஆணையரிடம் போத்ரா புகார் அளித்துள்ளார். கடன் கொடுத்தவர்களிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக போத்ரா மீது கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மகன்களும் கைதாகினர். தொடர்ந்து சிறையில் இருந்து வந்தார் போத்ரா. தன் தந்தை மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி போத்ராவின் மகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மகள் கடத்தப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார் போத்ரா.
Cinema financier bothra's daughter was missing. Bothra complaints to T.nagar police, "she was kidnapped."