போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல், ஆர்.ஆர். நகர் பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான மாசி மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த நிலையில் பெரியகொளுத்துவான்சேரி, மதுரம் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் என்பவரது மகன் கிருதீஸ்வரன் 3 1/2 சிறுவன் இந்த பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தான்.
இன்று மதியம் பள்ளி வளாகத்தில் உள்ள பாத்ரூமில் சிறுநீர் கழிக்க எல்.கே.ஜி மாணவர்கள் பாத்ரூமிற்கு சென்றனர். அப்போது அங்கு அடைப்புகள் நீக்குவதற்காக செப்டிங்க் டேங்க திறந்து வைத்து விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். அப்போது அந்த சிறுவன் திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் உள்ளே விழுந்துள்ளான்.