காலா படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு டீசர்களும் இன்று யுட்யூபில் வெளியாகின. பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படமான காலாவின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே இணையத்தில் லீக் ஆனது. எனவே டீசரை அறிவித்த நேரத்துக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்தனர். தமிழ் டீசர் வெளியான சில மணி நேரங்களில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்து வருகிறது., இந்த நிலையில் படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு டீசர்களை அறிவித்தபடி காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ளது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம். காலாவின் இந்தி மற்றும் தெலுங்குப் பதிப்புகளும் கணிசமான விலைக்கு விற்பனையாகியுள்ளன. அந்தப் பாத்திரத்தின் இயல்புப்படி நெல்லைத் தமிழில் பேச வேண்டும். ரஜினியைப் பொறுத்தவரை சென்னை, மதுரை வட்டார தமிழில் அவர் படங்களில் பேசியிருந்தாலும், அதை படம் நெடுகிலும் பேசியதில்லை. சில காட்சிகளில் மட்டும் பேசியிருப்பார். மற்றபடி, தனக்கே உரிய 'ரஜினி ஸ்லாங்'தான் அவர் பாணி. இப்போது வெளியாகியுள்ள டீசரிலேயே அதற்கான ஒரு சாம்பிளும் உள்ளது. தனக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் எதிரிகளின் ஏரியாவுக்குள்ளேயே அதிரடியாக நுழைந்து, "க்யா ரே... செட்டிங்கா.... வேங்கை மகன்...ஒத்தைல நிக்கேன்... தில்லிருந்தா மொத்தமா வாங்கலே..." என்று கர்ஜிக்கிறார் ரஜினி. பக்காவாக திருநெல்வேலி வழக்கு மொழியில் இந்த வசனத்தை அவர் பேசியுள்ளார். இந்தக் காட்சியமைப்பு, வசனங்களை ரஜினியின் இன்றைய அரசியல் பிரவேசம், அதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகள் ஆகியவற்றுடன் பொருத்திப் பார்த்து நெட்டிசன்கள் மீம்களை உருவாக்கித் தாக்கி வருகின்றனர்.
In Kaala teaser Rajinikanth is roaring in Nellai slang Tamil that steals the heart of viewers.