தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது
12 ஆம் வகுப்பு தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,903 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதுகின்றனர் இதற்காக 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கைப்பேசி எடுத்துவரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு பொதுத்தேர்வுகள் எழுதுவோர் தங்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துக்கள், சந்தேகங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
DES : General selection for Class XII students in Tamilnadu and Puducherry starts today and will continue till April 6