இந்திய சினிமாவின் ராணியாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் 7 கிலோமீட்டர் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மும்பை நகரில் தென்இந்தியரான ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஸ்ரீதேவியை வழியனுப்பி வைத்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று இந்திய சினிமாவில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. மெழுகுச் சிலையான ஸ்ரீதேவி எந்த கேரக்டருக்கான மேக்அப் போட்டாலும் அந்த கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலிப்பவர்.