இரங்கல் எல்லாம் சரி...யார் அந்த ஸ்தாபகத் தலைவர்?- வீடியோ

2018-03-01 2

ஜெயேந்திரர் மறைவுக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் லெட்டர் பேடில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் ஸ்தாபகத் தலைவர் என்று மொட்டையாக உள்ளதால் அது குறித்து புது கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே கமல்ஹாசன் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அன்றைய தினமே அதன் நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார். இந்த கட்சிக்கு கமல்தான் பொதுச் செயலாளர் என்று கூறப்பட்டது. மேலும் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவரே முதல்வராக இருக்க மாட்டார்கள் என்றும் மாறி மாறி ஒருவர் பின் ஒருவராக முதல்வராக இருப்பர் என்றும் தெரிவித்திருந்தார்.

Makkal Needhi Maiam party releases the condolence letter for demise of Jayendrar. But in the letter pad there is no sign of the founder or name of the founder.