வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு இந்திய அளவில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கார்த்திக் சிதம்பரம் கைது தொடர்பான கேள்விக்கு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் aவர்களை கைது செய்வதில் தவறில்லை என்றார். மேலும் விழுப்புரத்தில் நடைபெற்ற கொலை குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் உயிரிழந்து வருவதற்கு அகில இந்திய அளவில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் திருமாவளன் தெரிவித்தார்.