A visually challenged fan from Uttar Pradesh named Jatin Valmiki was waiting outside actress Sridevi's house for the past two days. Sridevi helped him to save his brother.
ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்து பார்வையற்ற ரசிகர் ஒருவர் கடந்த 2 நாட்களாக அவர் வீட்டு வாசலில் காத்திருந்திருக்கிறார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். சனிக்கிழமை மாலை இறந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு தான் மும்பை கொண்டு வரப்பட்டது. ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடத்தியதால் அவரின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க தாமதம் ஆனது. என் சகோதரருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டபோது அறுவை சிகிச்சை செய்ய ஸ்ரீதேவிஜி உதவி செய்தார். அவர் எனக்கு ரூ. 1 லட்சம் கொடுத்ததுடன், கட்டணத்தில் ரூ. 1 லட்சம் குறைக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினார் என்றார் ஜதின் வால்மிகி. ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்ததும் அவரின் ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரின் வீட்டிற்கு முன்பு கூடிவிட்டனர். பலர் கடந்த 2 நாட்களாக அவர் வீட்டிற்கு முன்பு காத்திருந்தனர்.