கருணை இல்லத்தில் பாதாள பிணவறை...தொடரும் மர்மம்...வீடியோ

2018-02-27 5,429

காஞ்சிபுரம் மாவட்ட பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த முதியோர் காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எலும்புகள் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இரண்டாவது நாளாக 200 பேர் முதியோர் இல்லத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர் சோதனையில் முதியோர் இல்லத்திற்குள் பாதாள பிணவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகத்தில் தினந்தோறும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆதவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு அவர்களை வெளியில் விடவும் நிர்வாகம் மறுப்பது தெரிய வந்தது.

Videos similaires