தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில்லை என சில வாரங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டுக் குழு அறிவித்தது. டிஜிட்டல் முறையில் தியேட்டர்களில் படங்களை திரையிடும் பணிகளை செய்து வரும் QUBE, UFO, PHD, சோனி, கிராபுல் நிறுவனங்ககள் தொடர்ந்து கட்டணங்களை உயர்த்தி வந்தன. இன்றைய சினிமா வசூல் நிலவரங்கள் மோசமாக உள்ளன. படத்தைத் திரையிடுவதற்கான அனைத்து அடிப்படை பணிகளையும் தயாரிப்பாளர்கள் செலவில் செய்யப்படுவதால் டிஜிட்டல் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல வருடங்களாக தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுப்பப்பட்டு வந்தது. தென் மாநிலங்கள் ஒன்று கூடியதால் அவர்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
There is a big confusion prevails in Kodambakkam due to cinema strike nearing.