ஸ்ரீதேவியின் கணவர் செய்த செயல் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார். திருமணம் முடிந்ததும் போனி குஷியை அழைத்துக் கொண்டு மும்பை சென்றுவிட்டார். ஸ்ரீதேவிக்கு சர்பிரைஸ் கொடுக்கிறேன் என்று சொல்லி போனி கபூர் சனிக்கிழமை துபாய்க்கு சென்றுள்ளார். மாலை 5. 30 மணிக்கு ஹோட்டலை அடைந்த அவர் ஸ்ரீதேவியுடன் 15 நிமிடங்கள் பேசியதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீதேவி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை பார்த்து போனி கபூர் ஏன் உடனே தகவல் கொடுக்காமல் 3 மணிநேரம் கழித்து போலீசாரை அணுகினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.