நீரவ் மோடி ரூ11,360 கோடியை விட அதிக மோசடி செய்துள்ளார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. இதன் மதிப்பு இன்னும் கூட உயரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.
இதில் தொடக்கத்தில் நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவரிடம் 23 அசையா சொத்துக்கள் பல்வேறு இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.