ஊர் சுற்றும் பிரதமரிடம் உருப்படியான திட்டங்களைப் எதிர்பார்க்க முடியாது ! ஈவிகேஎஸ்-வீடியோ

2018-02-26 89

ஊர் சுற்றும் நாடோடியாக இருக்கிற பிரதமரிடம் இருந்து உருப்படியான திட்டங்களைப் எதிர்பார்க்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்


ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கமல் அரசியல் கட்சியை ஆரம்பித்து தெளிவாக பேசி யிருக்கிறார் . ஆனால், மேடையில் கெஜ்ரிவாலை பேசவிட்டது தவறு என்றும்கெஜ்ரிவால் காங்கிரஸ் மற்றும் திராவிட இயக்கத்தைப் பற்றி தவறாக பேசியிருக்கிறார் என்றார் சென்னையில் ஜெயலலிதா அவர்களுடைய சிலையை திறந்திருக்கிறார்கள். அதற்குக்கீழே இவர்தான் ஜெயலலிதா என போர்டு வைக்க வேண்டும். அப்போதுதான் அது ஜெயலலிதா என தெரியவரும் என்றும் விமர்சனம் செய்த அவர்

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி காவிரி விவகாரம் குறித்து ஏதும் பேசவில்லை. என்றும் அவர் இந்திய நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவித்திருப்பார் ஆனால் அவர்தான் ஊர் சுற்றும் நாடோடியாக இருக்கிறாரே. அவரிடம் இருந்து உருப்படியான திட்டங்களைப் எதிர்பார்க்க முடியாது என்றார்.

மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் எவ்வளவு கமிஷன் வாங்கப்பட்டது என்பது விரைவிலேயே தெரிய வரும். என்றும் அவர் கூறினார்.

Des : Former Tamil Nadu Congress leader EKGS Ilangovan said that the Prime Minister can not expect the schemes from the Prime Minister.