யாரும் போன் பண்ணாதீங்க ப்ளீஸ்...ஶ்ரீதேவி குடும்பத்தினர் வேண்டுகோள்!- வீடியோ

2018-02-26 10,479


இந்தியத் திரையுலகில் கனவுக் கன்னியாக, சூப்பர் ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பால் காலமானார். மருத்துவ பரிசோதனைகள் காரணமாக அவரது உடல் இந்தியா வருவதற்குக் காலதாமதம் ஆகிறது. இன்று பிற்பகல் இந்தியா வந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஶ்ரீதேவியின் குடும்பத்தினர், ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகொள் விடுத்துள்ளனர். இந்த துக்க சமயத்தில் மொத்த மீடியாவின் ஆதரவிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. மறைந்த ஸ்ரீதேவி கபூரின் உடல் இந்தியாவிற்கு வர உள்ளது. அது பற்றிய விவரங்களை கிடைக்கப் பெறும் போது தெரிவிக்கிறோம். தயவு செய்து யாரும் இது தொடர்பாக குடும்பத்தினருக்கு போன் செய்து கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

Videos similaires